அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட 9 பேர் நியமனம்!!
அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடியார் இடம்பெற்றுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஆட்சி மன்ற குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உட்பட 9 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக இருந்தார். அக்குழுவின் உறுப்பினர்களாக மதுசூதனன், ஓபிஎஸ், வேணுகோபால், ஜஸ்டின்ராஜ், தமிழ்மகன் உசேன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா தம்மை உண்மையான கட்சி என கூறிக் கொண்டு ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்தார். அதில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் இரட்டை சிலை சின்னம் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் அதிமுக பெயர், கொடி அனைத்தும் இந்த அணிக்கே சொந்தமானது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா காலத்தில் நியமிக்கப்பட்ட அதிமுக ஆட்சிமன்றக் குழு கூடியது. இக்கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட 9 பேர் கொண்ட அதிமுக ஆட்சி மன்ற குழு அறிவிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட 9 பேர் நியமனம்!! https://t.co/0oWR4JiyMH #AIADMK pic.twitter.com/RnqjJHE4wI
— Oneindia Tamil (@thatsTamil) November 27, 2017
அதிமுக ஆட்சிமன்றக் குழு விவரம்:
1) ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
2) இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி
3) அவைத் தலைவர் மதுசூதனன்
4) துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி
5) துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
6) அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன்
7) இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி
8) சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் ராஜ்
9) மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால்.
இந்த ஆட்சி மன்றக் குழுவில் எடப்பாடியார், முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி ஆகிய 4 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications