அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு ?

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அளிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு?- வீடியோ

    சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுகவில் ஓபிஎஸ் முதலில் கலகக் குரல் எழுப்பி இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். ஆர்.கே. நகர் தேர்தலின் போது இரட்டை இலை சின்னம், கட்சி, கொடி முடக்கப்பட்டது.

    பிப்ரவரி மாதம் பிரிந்த அணிகள் ஆகஸ்ட் மாதம் அமாவாசையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிட்டனர். இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக டிடிவி தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரினர்.

    சின்னம் யாருக்கு?

    சின்னம் யாருக்கு?

    பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் இரு அணிகளிடமும் விசாரணை நடத்தியது. 7 கட்டமாக நடந்த விசாரணையில் இரு அணிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளனர். நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படமால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    நிதிஷ்குமார் வெற்றி

    நிதிஷ்குமார் வெற்றி

    இதனிடையே ஐக்கிய ஜனதா தள் கட்சியும் அதன் சின்னமுமான அம்புவும் நிதிஷ்குமாருக்குதான் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதன்படி பார்த்தால் இரட்டை இலை ஒருங்கிணைந்த அணிக்குத்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் ஆணையம் தீர்ப்பு

    தேர்தல் ஆணையம் தீர்ப்பு

    எந்த நிமிடத்திலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வெளியாகலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் உயிர் போன்றது இரட்டை இலை. படித்தவர்கள் மட்டுமில்லாது படிக்காதவர்களுக்கும் சின்னம்தான் முக்கியமானது. அதுதான் ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்கிறது.

    அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம்

    அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம்

    இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அதுவே உண்மையான அதிமுகவாக கருதப்படும். ஏற்கனவே சசிகலா குடும்பத்தில் நடைபெறும் ரெய்டினால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். சின்னம் ஒருங்கிணைந்த அணிக்கு கிடைக்கும் பட்சத்தில் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சின்னம் ஒரு தரப்புக்கு கிடைக்கும் பட்சத்தில் மற்றொரு தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+