நேரம், காலம் பார்த்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்த அதிமுக
சென்னை: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு இணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க. சார்பில், புதன்கிழமையான இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவடைகிறது. எனவே, மார்ச் மாத துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதுமே, அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை முந்தி கொண்டு செல்வது ஜெயலலிதா வழக்கம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதே யுக்தியை பின்பற்றினார். இப்போதும், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிவிட்டது அதிமுக.

நாடாளுமன்ற தேர்தல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவாகியுள்ளது. இந்த வெற்றியை சட்டசபை தேர்தலில் தக்க வைக்க அதிமுக முயன்றுவருகிறது.

முருகன் ஆசி
தேர்தல் பிரசார நோட்டீஸ்களை, சிறுவாபுரி முருகன் கோவிலில், சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டிருந்ததாம்.

ஏஜென்ட்
வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஓட்டுகளைப் பெறுவதற்காக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஜெயலலிதா பேரவை சார்பில், ஏஜென்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஸ்து பிரச்சாரம்
அந்த ஏஜென்டுகளுக்கு தேர்தல் பிரசாரம் குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தலைமையில், இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்க, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வாஸ்துப்படி வடகிழக்கு பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் பிரசாரம்
திண்டுக்கல்லில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனரும் நத்தம் தொகுதி செயலருமான ஆர். வி. என். கண்ணன் தலைமையில் இன்று அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பிரசாரம் தொடங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications