கவனிக்க ஆளில்லாததால் தானே சுடுகாட்டில் சென்று இறந்த எய்ட்ஸ் நோயாளி
பழனிசெட்டிபட்டி: கவனிக்க யாரும் இல்லாததால் எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தானாகவே சுடுகாட்டில் சென்று படுத்து இறந்த சம்பவம் அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் சந்திரசேகர்.
இவர் எய்ட்ஸ் நோயாளி. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
எய்ட்ஸ் நோயாளி:
இருந்தபோதும் நோயின் தாக்கம் குறையாததால் அடிக்கடி மதுபோதைக்கும் அடிமையானார். இதனால் இவரது உடல்நிலை மேலும் மோசமானது. எய்ட்ஸ் நோயாளியான இவரை கவனிக்க யாரும் இல்லை. இதனால் சாப்பாட்டுக்கும் மிகுந்த கஷ்டப்பட்டார்.
சுடுகாட்டுக்கு சென்றவர்:
தனது உடல்நிலை மேலும் மோசமானதை உணர்ந்த சந்திரசேகர் இனி நான் பிழைக்க மாட்டேன் என்று நினைத்து சுடுகாட்டில் படுத்து கொண்டார்.
இறந்து போன சந்திரசேகர்:
உடல் சோர்ந்த நிலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாக வந்தவர்கள் சந்திரசேகர் இறந்து கிடந்ததை கண்டு ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை:
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேள்விக்குறி:
ஒரு நோயாளி ஒருவர், கவனிக்க ஆளில்லாமல் இறந்த இச்சம்பவம் மனிதநேயத்தினைப் பற்றிய ஒரு பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications