அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் புறப்பட்டனர்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று சென்னைக்கு வந்தனர்.

பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் வெளியேறினர்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை சுற்றி 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்னர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications