ஜெ. உடல்நிலை பற்றிய அறிக்கையில் முக்கிய முரண்பாடு.. ஸ்டாலின் பேட்டி
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன. அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: டெல்லி எய்ம்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் கேட்டுக் கொண்டார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையில் எத்தனை முரண்பாடுகள் உள்லன. அவரது சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர் சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டன. ஆனால் மருத்துவ அறிக்கையில் போயல் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா மயங்கிய நிலையிலேயே அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.
இந்த இரு வேறு அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர் செல்வத்தை விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றும் விஜயபாஸ்கரும், அவரை விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் ஓ.பன்னீர் செல்வமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்நிலையில் இந்த மருத்துவ அறிக்கையில் குளறுபடிகள் உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஓபிஎஸ் கூறுவது உண்மையா, விஜயபாஸ்கர் கூறுவது உண்மையா, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை உண்மையா அல்லது எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை உண்மையா என்பது குறித்து தெரியவரும்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சந்திக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications