Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலைகுறித்து சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குழுவிடம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்டறிந்தனர்.

Subscribe to Oneindia Tamil


சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து நேற்று கேட்டறிந்தனர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்படுகிறது.

AIMS doctors team was discussing about jayalalitha health condition

அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அறிக்கைகளும், தான் மறுபிறவி எடுத்திருப்பதாகவும் அவர் அறிக்கைகள் வெளியிட்டார்.இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு வந்தனர்.

அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போத அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்தவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பிற்பகலுக்கு மேல் அவர்கள் விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

TamilNadu Chief Minster jayalalitha has been admitted in hospital for over last two months. and yesterday three delhi AIMS Doctors team arrived to chennai and discussed about the Health condition of jayalalitha.

60
'
முதல்வர் ஜெயலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவர் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்தவர்கள் குழு சென்னை அப்பல்லோ மருத்துவர்களிடம் நேற்று கேட்டறிந்தனர். முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+