திருச்சி-சென்னை இடையே புதிய விமான சேவை துவக்கம்
திருச்சி - சென்னை இடையே புதிய விமானச் சேவையை ஏர் கானிவல் என்ற நிறுவனம் துவக்கியுள்ளது.
திருச்சி: திருச்சி - சென்னை இடையே கூடுதல் விமான சேவை தேவை என்று பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து புதிய விமானச் சேவையை ஏர்கானிவல் என்ற நிறுவனம் நேற்று முதல் துவக்கியுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவையாக திருச்சி - சென்னை இடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தினமும் 3 விமானத்தை இயக்கி வருகிறது.

இந்நிலையில், திருச்சி - சென்னை இடையே கூடுதல் விமான சேவை தேவை என்று பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு புதிதாக ஏர் கார்னிவல் என்ற நிறுவனம் விமான சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விமான சேவைக்காக மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதியளித்தை தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தனது விமான சேவையினை ஏர்கார்னிவல் நிறுவனம் துவக்கியது. அதன்படி காலை 9.20க்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து 9.40 க்கு புறப்பட்டு செல்லும்.
ஏற்கனவே சென்னைக்கு 3 விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 4வது உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்கி இருப்பது, பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே திருச்சி விமானநிலையத்தில் 6 விமான நிறுவனங்கள் போக்குவரத்தை நடத்தி வரும் நிலையில் தற்போது 7வது நிறுவனம் தனது சேவையை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications