For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமியை அடிமையாகக் காட்டும் கல்யாண் ஜுவல்லர்ஸ் - ஐஸ்வர்யா ராய் விளம்பரம்! - கடும் கண்டனம்

By Shankar
Google Oneindia Tamil News

ஏழைச் சிறுமியை அடிமையாகக் காட்டும் கல்யாண் ஜூவல்லர்ஸ் - ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பழங்காலத்தில் இளவரசிகள் அல்லது மேட்டுக் குடிப் பெண்கள் ஒய்யாரமாக வீற்றிருக்க, அவர்களுக்கு ஏழை அடிமைச் சிறுமிகள் குடைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு விளம்பரத்தை தங்கள் நகைக்கடைக்காக உருவாக்கியுள்ளது கல்யாண் ஜுவல்லர்ஸ்.

ஒய்யாரமாய் ஐஸ்வர்யா

ஒய்யாரமாய் ஐஸ்வர்யா

இந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் ஓய்யாரமாய் அமர்ந்திருக்கிறார். கருப்பாக முகமற்ற ஒரு சிறுமி அவருக்குக் குடைப் பிடித்துள்ளார்.

அடிமை முறைக்கு சாமரமா

அடிமை முறைக்கு சாமரமா

அடிமை முறை ஒழிந்து சமத்துவம் பேசும் இந்தக் காலத்தில் மீண்டும் அடிமை முறைக்கு சாமரம் வீசுகிறது கல்யாண் ஜுவல்லர்ஸின் இந்த விளம்பரம் என்று விமர்சித்துள்ளனர் பரா நக்வி மர்றும் நிஷா அகர்வால் போன்ற சமூக ஆர்வலர்கள்.

ஐஸ் இப்படி நடிக்கலாமா

ஐஸ் இப்படி நடிக்கலாமா

ஐஸ்வர்யா ராய் நாடறிந்த பிரபலம். அவர் இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர் வேலை முறையை ஆதரிப்பது போன்ற விளம்பரத்தில் தோன்றுவது சமூகத்துக்கு மோசமான செய்தியைப் பரப்புவதைப் போன்றது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்யாணுக்கும் கண்டனம்

கல்யாணுக்கும் கண்டனம்

அத்தோடு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு தங்கள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடை திறக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

பெரும் கூட்டம்

பெரும் கூட்டம்

இந்த நிகழ்ச்சிக்காக அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நாகார்ஜூனா, சிவராஜ்குமார், மஞ்சு வாரியர் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் திரண்டு வந்தது. அதை விட அவர்களைப் பார்க்க ஆயிரக்கணககானோர் கூடி பேஸ்புக் உள்ளிட்டவற்றில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டனர் என்பதும் நினைவிருக்கலாம்.

English summary
Aishwarya Rai Bachchan's advertisement for Kalyan Jewellers which appeared in a leading daily has been criticized for using an outdated image of aristocracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X