20 தமிழர்கள் சுட்டுக்கொலை: அப்பட்டமான மனித உரிமை மீறல்… சரத்குமார் கண்டனம்..
சென்னை: ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமக தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றார்.

ஆந்திர வனத்துறை அமைச்சர், தமிழக தொழிலாளர்கள் மீண்டும் வந்தால் சுட்டுக்கொல்வோம் என்று பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியா ஜனநாயக நாடு. சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாளை மார்க்கெட் திடலில் மாவட்ட செயலாளர்கள் சேவியர் லாரன்ஸ், அதியமான் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications