டிரெண்டான அஜித்.. தேர்தல் நேரத்திலும் நோட் பண்ண ரசிகர்கள்.. அப்படி அந்த போனில் என்னதான் இருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருவது மட்டும் அல்லாமல் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணி அளவில் மாநிலத்திலேயே திருப்பூரில் அதிகப்படியாக 62.97% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் வழக்கம் போல் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைப் வெள்ளை கோட்சூட் உடன் பதிவு செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே அஜித் குமார் வந்தடைந்தார். காலை 7 மணிக்கு சரியாக அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களையும் கருத்தில் கொண்டு அவர் முன்கூட்டியே வந்ததால், வாக்குபதிவு துவங்கிய உடன் வாக்குபதிவு செய்தார்.
வாக்கு பதிவு முடிந்த உடன், தனது விரலில் பதிக்கப்பட்ட மை அடையாளத்தை ஊடகங்களிடம் அமைதியாகக் காட்டிய அஜித், எந்த பேட்டியும் கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.
இதற்கிடையில் வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் உற்சாகத்தை பார்த்து அசந்துப்போன அஜித் தனது மொபைல் போனில் போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரசிகர்களின் ஆரவாரத்தை அவர் வீடியோ எடுத்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், அவர் பயன்படுத்திய மொபைல் போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இணையம் முழுக்க அஜித் என்ன போன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வி அனல் பறந்தது. இந்திய நிலையில் அஜித் பயன்படுத்தியது Samsung Galaxy S22 என்று அடையாளம் காணப்பட்டது. 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டைனமிக் ஆமோலெட் 2X திரையுடன், 48Hz முதல் 120Hz வரை மாறும் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட இந்த போன், உயர் தர போட்டோகிராபி திறன் கொண்டது.
இன்னும் சிலர் அஜித் தனது போனுக்கு பயன்படுத்திய case வரையில் ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடித்துள்ளனர். அஜித் பயன்படுத்தியது GRIPP MagSafe Ring Stand Holder கேஸ் எனவும் ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இன்று அஜித் வாக்குபதிவின் போது அவருடைய ஆடை கூட எவ்விதமான சிக்னலை கொடுக்க கூடாது என்பதை உணர்ந்து வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட், வெள்ளை கோட், வெள்ளை ஷூ என மொத்தமாக வெள்ளை ஆடையில் வந்தார். ஆனாலும் இவர் வந்து சென்ற சில நிமிடங்கள் 2 பெரிய சர்ச்சை வெடித்தது.

இரட்டை விரல் புகைப்படம்
வாக்குப்பதிவுக்குப் பிறகு அஜித் இரட்டை விரல் காட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனை சிலர் அதிமுக காட்சிக்கு தான் அவர் வாக்கு செலுத்தினார் என்பதை காட்டும் விதமாக இரட்டை விரல் காட்டியுள்ளார் என தகவல்களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டனர். கடந்த தேர்தலின் போது விஜய் கருப்பு சிகப்பு சைக்கிளில் சென்றதால் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் பரவியது. ஆனால் தற்போது விஜய் திமுக-வை எதிர்த்து இத்தேர்தலில் போட்டிப்போட்டு வருகிறார்.
"No Need" வதந்தி
மேலும், வாக்குப்பதிவு முடித்து அஜித் வெளியே வந்தபோது திடீரென அவரிடம் செய்தியாளர்ர ஒருவர் மாற்றம் வேண்டுமா? என்ற கேள்வி கேட்டதாகவும், அதற்கு அஜித் "No Need" என பதிலளித்ததாக தகவல் பெரிய அளவில் வைரலானது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளானது. குறிப்பாக, முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் அவர்களிடம் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அஜித் இதுபோன்ற எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications