அட்சய திருதியை: இன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும்
சென்னை: அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுப்பார்கள், பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தான தர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துர்முகி வருஷம் சித்திரை மாதம் 26 ம் தேதி இன்று அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நன்னாளில் நான்கு யுகங்களில் முதன்மையானது எனப்படும் கிருத யுகம் தோன்றியது.
அட்சய திருதியை வடநாட்டில் இந்த நாள் அகதீஜ் என்று கொண்டாடாப்படுகிறது. மங்களனாகிய சிவனை வணங்கினால் பெரும் பாக்கியத்தைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படக்கூடிய தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்ப்பணம், தீர்த்த ஸ்நானம் ஆகியவை குறைவற்ற பலனைக் கொடுக்கும்.
அக்னியில் ஆகிருதி செய்யப்பட்ட பொருட்களும் தானம் செய்த பொருட்களும் குறைவதே இல்லை. இந்த நாளைத்தான் ரிஷிகள் ‘அட்சய' என்று போற்றினார்கள். இன்று தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் தானம் செய்யப் பட்டவை மென்மேலும் பெருகும்.

•அட்சய திருதியை நன்னாளில், துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மா குசேலருடைய தரித்திரத்தைப் போக்கி குறைவற்ற செல்வத்தை வழங்கினார்.
•இந்த அட்சய திருதியை நன்னாளில் தான் கலியுகத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் ஏழ்மையைப் போக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றி அதன்மூலம் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.
•இப்படிப்பட்ட நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் நல்மனதுடன் கடமைகளைச் செய்து, தாராளமாக பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
•சாஸ்திரப்படி செய்யும் தானம், தர்மம் செய்யும் சுபச் செலவானது உண்மையான வங்கியில், பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு, நமக்கு எந்தப் பிறவியில், எந்த லோகத்தில், நமக்கு எந்த விதமாகா தேவைப்படுகிறதோ அந்த விதத்தில் பொருளாகவோ, பணமாகவோ அசலுடன் பன்மடங்கு வட்டியுடன் நமக்கு வந்தே தீரும்!
•ஆகையால் இந்த அட்சய திருதியை நன்னாளில் நம்மால் இயன்ற அளவு தானங்களைச் செய்து புண்ணியங்களைப் பெறலாம்! தண்ணீர், நீர் மோர், விசிறி, அன்னதானம் செய்யலாம்!
•ஆடைகள், பழங்கள் தானம் செய்தால் சிறப்பான வாழ்க்கை கிடைக்கும்
•அன்னதானம் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது
•நீர்மோர், பானகம் தானம் செய்பவர்களுக்கு குழந்தைகள் கல்வியில் உயர்நிலை பெறுவர்
•அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் தானம் செய்தால் அகால மரணங்கள் ஏற்படுவதில் இருந்து நிவர்த்தி
•தயிர் சாதம் தானம் செய்தால் பாவங்கள் ஒழியும்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications