தடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு.. போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி
Subscribe to Oneindia Tamil
மதுரை: அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றினர். போலீசார் கடுமையாக தடியடி நடத்தி வெளியேற்றியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குறிப்பாக சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள், போலீசார் மீது பதிலடியாக கல்வீச தொடங்கினர்.
கல்வீச்சிலிருந்து தப்பிக்க ஆங்காங்குள்ள கடைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர் போலீசார். கற்கள் காலியானதும் போராட்டக்காரர்களை விரட்டி செல்ல ஆரம்பித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் சிலரும், போலீசாரில் சிலரும் காயமடைந்தனர்.













Click it and Unblock the Notifications