அதிமுக பொதுச் செயலராக தயங்கும் சசிகலா... தூண்டிவிடும் மன்னார்குடி கேங்!
மத்திய அரசின் நெருக்கடியால் அதிமுக பொதுச்செயலராவதற்கு சசிகலா தயங்குகிறார்; ஆனால் அவரை பொதுச்செயலராக்குவதில் மன்னார்குடி கோஷ்டி படுமும்முரமாக இருக்கிறது.
சென்னை: அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள துடியாய் துடிக்கிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலால் 'அக்னி பரீட்சை'க்கு சசிகலா அச்சப்படுகிறாராம்... அவரை எப்படியும் குறைந்தபட்சம் அதிமுக பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி படுதீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே கட்சி, ஆட்சி நிர்வாகத்தை சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி கைப்பற்ற முயற்சித்தது. இதற்கு மத்திய அரசு கடும் முட்டுக்கட்டை போட்டது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் புதிய முதல்வர் தேர்வு விவகாரத்திலும் சசிகலா தரப்பை அடக்கி வைத்தது மத்திய பாஜக அரசு. ஆனாலும் சசிகலாவை சின்னம்மாவாக்கி அவரை பொதுச்செயலராக்கிவிட வேண்டும் என்பதில் தொடர்ந்து 'நாடகங்களை' நடத்தி வருகிறது மன்னார்குடி கோஷ்டி.

சின்னம்மா புகழ்
நாள்தோறும் சென்னைக்கு அதிமுக நிர்வாகிகளை வரவழைத்து 'சின்னம்மா' புகழ்பாட வைத்து துண்டிவிட்டு வருகிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் அடுத்தடுத்து ரெய்டுகளால் ரொம்பவே ஆடிப்போய்விட்டாராம் சசிகலா.

சசிகலா அச்சம்
அதிமுக பொதுச்செயலர், முதல்வர் பதவி கோஷங்கள் தம்மை சிறையில்தான் தள்ளும் என திடமாகவே நம்புகிறாராம் சசிகலா. ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் கட்சியையாவது நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.

ஓபிஎஸ் லாபி
அதே நேரத்தில் ஆட்சியும் கட்சியும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் விரும்புகிறார். இதைத்தான் மத்திய அரசிடமும் ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்.

சசிக்கு ஆதரவாக தீர்மானம்
இதனால் வரும் 29-ந் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மன்னார்குடி தரப்போ, சசிகலாவை அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்க வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறது; அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்போ, அதிமுகவில் 5 ஆண்டுகாலம் சசிகலா தொடர்ந்து உறுப்பினராக இல்லாததால் அவர் பொதுச்செயலராக முடியாது; அத்துடன் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா பொதுச்செயலராகமாட்டார் என திடமாக நம்புகிறது.

துணைப் பொதுச்செயலர்கள்
இதனிடையே சசிகலாவுக்கு எழுந்து வரும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் அதிரடியாக ஜாதிக்கு ஒரு துணை பொதுச்செயலர் பதவியை தரவும் ஆசைகாட்டி வருகிறது மன்னார்குடி தரப்பு என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதேநேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கவும் அதிருப்தி அணி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications