கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ், பாஜக, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன், மத்திய அரசு என கட்சி பாகுபாடிந்றி அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்தி பாகுபாடற்ற பெரும் தலைவர் கருணாநிதி என்பதை பறை சாற்றினர்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வந்து கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் செந்தில் தொண்டமான் வந்திருந்தார். அதேபோல வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும் வந்திருந்தார்.

புதுவை அரசு சார்பில் முதல்வர் நாராயணசாமி, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மத்திய அரசு சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மமதா பானர்ஜி, பரூக் அப்துல்லா, டெரிக் ஓ பிரையன், சரத் பவார் போன்ற தலைவர்களும் கருணாநிதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கருணாநிதி உடல் அடக்கத்தில் கலந்து கொண்டு உருக்கமாக காணப்பட்டார். கருணாநிதியுடனான நட்புக் காலம் அவரது மனதுக்குள் ஓடியதை அவரது முகமே காட்டிக் கொடுத்தது.
மொத்தத்தில் பல்வேறு கட்சிகளும் கொண்டாடிய தலைவராக கருணாநிதி விளங்கினார் என்பதை இன்றைய நல்லடக்க நிகழ்வு எடுத்துக் காட்டியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications