வட மாநில பெண்களிடம் சில்மிஷம் செய்த காவலர் சஸ்பெண்ட்
ஓசூர்: ஓசூர் அருகே சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வடமாநில பெண்களிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே சூளகிரியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் தங்கி சுற்று வட்டார பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்ற ராஜஸ்தான் பெண்கள் 2 பேர் மற்றும் சிறுமியை அங்கிருந்த போலீஸ்காரர் வடிவேல் என்பவர் விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார்.
காவல் கட்டுபாட்டு அறையில் வைத்து அந்த பெண்களை தாக்கி அவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள் விசாரணை நடத்தி தவறு செய்த போலீஸ்காரர் வடிவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வர தவறிய சிறப்பு எஸ்ஐ கணேசன் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் சிறுமிக்கு ஓசூர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர்களிடம் ஓசூர் கலெக்டர் பரவீன் விசாரணை நடத்தினார். தற்போது அவர்கள் ஓசூரில் உள்ள நரேந்திர நம்பிக்கை நட்சத்திர காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications