மக்களுடன் கூட்டணியாம்: எப்படி எல்லாம் சமாளிக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை மாறாக மக்களுடன் கூட்டணி வைத்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிமுக கூட்டம் மற்றும் கோபி நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.
அந்த கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,

மக்கள் கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இன்றி தனியாக இல்லை. நாங்கள் மக்கள் கூட்டணியில் உள்ளோம். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிரிகள் அவரது கட்சிக்குள் தான் இருக்கிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டம்
காங்கிரஸ் அன்றி வேறு எந்த கட்சியாவது ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான ஏழை தொழிலாளிகள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்தி விடுவார்கள். மேலும் முதியோர் உதவித் தொகை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியும் நிறுத்தப்படும்.

தமிழகத்தில் ஆட்சி
நாம் கடினமாக உழைத்து நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் வரும் 2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும்.

ராணுவம்
இந்திய ராணுவம் சீனா, பாகிஸ்தான் ராணுவங்களை விட பலவீனமாக உள்ளது என்று மேடைதோறும் ஜெயலலிதா கூறி வருகிறார். தேசப்பற்றுள்ள யாரும் ராணுவம் மீது குறை கூற மாட்டார்கள். சீனா, பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ராணுவத் தளவாடங்கள் அதிகம் உள்ளன. மேலும் ஆசிய நாடுகளிலேயே இந்தியா தான் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்கிறது. ராணுவம் பலவீனமாக உள்ளது என்று கூறுவது தேசவிரோத செயல். அதனால் ஜெயலலிதா மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. மோடியால் பிரதமர் ஆகவே முடியாது என்றார் இளங்கோவன்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications