அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. மீண்டும் அழுத்தி சொன்ன மாஜி அமைச்சர்
சென்னை: அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார். எங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதிமுகதான் கூட்டணிக்கு தலைமையேற்கும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று என்று இரு கட்சியின் தலைவர்களும் கூறி வருகின்றனர். பாஜகவின் டெல்லி தலைமை அதிமுக உடன் கூட்டணி என்று அறிவித்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு அப்படியே உறுதி செய்யாமல் மழுப்பலாகவே பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பேசிய அண்ணாமலை, பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது. அதனால், கூட்டணி தொடர்பாக மாநில தலைவராக என்னுடைய கருத்தை கூறியிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அதிமுக கூட்டணியை உறுதி செய்வது டெல்லி தலைமைதான்.. மாநில தலைமை இல்லை என்று பதிலடி கொடுத்தது. பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரும் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இத்தகைய சூழலில், பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று அண்ணாமலை மீண்டும் பேசியிருந்தார்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி வைப்போம்" என்று கூறினார். இது தொடர்பாக செல்லூர் ராஜு கூறியதாவது:- "அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார். எங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அவர்களின் நிலைப்பாடு அது. எங்கள் பொதுச்செயலாளரின் நிலைப்பாடுதான் எங்களுக்கு.. அதிமுகதான் கூட்டணிக்கு தலைமையேற்கும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்வோம்" என்றார்.

ஓபிஎஸ் அணி சார்பில் வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் செல்லூர் ராஜூவிடம் கேட்டனர். அப்போது செல்லூர் ராஜூ கூறியதாவது:- "அவர் மாநாடு நடத்தி விட்டு போகிறார். அவர் கடையை விரிக்கிறார். ஒன்றுபட்ட அதிமுக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அவர் எதையாவது செய்ய வேண்டும் என்று செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் மறந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications