தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
கோவை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் 5 இடங்களில் வெற்றி பெரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். செயற்குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தலைமைதான் முடிவெடுக்கும். இதனை முடிவு செய்வதற்காக பாஜக அகில இந்திய பொதுக்குழு வரும் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.

மதிமுக கூட்டணி
ம.தி.மு.க., தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை.

அதிமுக கூட்டணி
பாஜக உடன் அதிமுக கூட்டணி என்பது தேர்தலுக்கு பின்னர் இருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 5 சீட்
தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜக தனித்து நின்றால் நல்லது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் 5 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதனை அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.

300 சீட் வெற்றி
அகில இந்திய அளவில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும். மோடி நிச்சயம் பிரதமர் ஆவார்.

கட்சி விரும்பினால்
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியவேண்டும் என்று கட்சி நிர்பந்தம் செய்தால் போட்டியிருவேன். அது கட்சியின் விருப்பத்தை பொருத்தது.

மோடிக்கு ஆதரவு
நரேந்திர மோடியைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்லை எனத் தெரிவித்த சுவாமி, மோடிக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டு அச்சப்பட்டே, இதுபோன்ற கருத்துகளை பிரதமர் கூறி வருகிறார் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications