தேர்தலுக்கு செய்த செலவை பேஸ்புக்கில் வெளியிட்டு அசத்திய வி.சி. வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ்
சென்னை: தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து அதை ஃபேஸ்புக்கில் முதல் ஆளாக தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ்.
கடந்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஆளூர் ஷாநவாஸ். வெற்றி வாய்ப்பை இழந்த அவர் தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.
தேர்தல் கணக்கை சமர்பித்ததை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ள முதல் வேட்பாளர் நவாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அன்பு நண்பர்களே..
தேர்தல் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் 17-06-2016 அன்று தாக்கல் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புகையை பெற்ற பிறகு, 18-06-2016 இன்று தலைவரை நேரில் சந்தித்து கணக்குகளை ஒப்படைத்தேன்.
குன்னம் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன் 20-04-2016 அன்று, தேர்தல் நிதி வேண்டி கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று வந்த தொகை சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட செலவுக் கணக்கு 14,66,555/- ரூபாய் ஆகும். இந்த செலவுகள் தேர்தல் ஆணையம் வரையறுத்த நாட்களுக்குள் செலவு செய்யப்பட்டவை மட்டுமே. அதற்கு முன்னரும் பின்னருமான செலவுகள், எஞ்சிய தொகையிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இதுபோக, தேர்தல் செலவுகளுக்காக நண்பர்களிடம் கடனாகப் பெற்ற சுமார் 2 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல், தேர்தல் ஆணையம் வரையறுத்த அடிப்படையான தேவைகளுக்கே பணம் செலவிடப்பட்டுள்ளன. எனது வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.
தேர்தல் முடிந்தாலும் தேர்தல் தொடர்பான பணிகள் முடியவில்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவித்தல், மக்கள் பிரச்சனைகளுக்காக தொகுதிக்கு அடிக்கடி சென்று வருதல் என பயணம் தொடர்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் வேண்டும்.
மிக்க அன்புடன்,
ஆளூர் ஷாநவாஸ்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications