இன்று முதல் அம்மா குடிநீர் .. 304 மையங்கள், 268 பஸ் ஸ்டாண்ட், 36 கடைகளில் கிடைக்கும்!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 304 விற்பனை மையங்களில் இதைப் பெறலாம்.
அதேபோல மாநிலம் முழுவதும் 268 பஸ் நிலையங்கள், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்கு
ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய் என்ற விலையில் அம்மா குடிநீர் பாட்டில்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டியில்
கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதையும் நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நேற்றே சென்னையில் விற்பனை தொடக்கம்
இதையடுத்து நேற்று சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மொத்தம் 43 இடங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை தொடங்கியது.

சென்னையில் எங்கு கிடைக்கும்...
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பஸ் நிலைய விற்பனை மையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் கிடைக்கும்.

ஆர்வத்துடன் பாட்டிலை வாங்கிய மக்கள்
மக்களுக்கு இந்த அம்மா குடிநீர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் நேற்றே ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு பாட்டில்களை வாங்கிச் சென்றனராம்.

10 நிமிஷத்தில் 10,000 பாட்டில்கள் காலி
அத்தனை இடங்களிலும் நேற்று பத்தே நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்றுத் தீர்ந்ததாம். கோயம்பேட்டில் மட்டும் 5 ஸ்டால்கள் போட்டு அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாம்.

ஆளுக்கு ஒரு பாட்டில் கொடுங்க...
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு விடப்பட்டுள்ள கிளாசிக் பஸ்களிலும் நேற்று அம்மா குடிநீருக்கு அமோக ஆதரவாம். அத்தனை பயணிகளும் ஆளுக்கு ஒரு பாட்டிலாக வாங்கி விட்டனர்.

இன்று முதல் விறுவிறு விற்பனை
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு அம்மா குடிநீர் பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளனர் அதிகாரிகள்.

பஸ்களில் கிடைக்கும்
அனைத்து தொலைதூர பஸ்களிலும் இன்று அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 304 மையங்கள்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பி் 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஸ் நிலையங்களில்
மேலும் தமிழ்நாட்டில் உள்ள 268 பஸ் நிலையங்களிலும், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications