திமுகவினரின் வீடுகளிலும் கூட 'அம்மா' வாழ்ந்து கொண்டிருக்கிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பல்வேறு திட்டங்கள் மூலமாக திமுகவினரின் வீடுகளில் கூட அம்மாவின் உருவப்படம் உள்ளது. அவர்களின் வீடுகளிலும் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சரும், சிவகாசி தொகுதி வேட்பாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

அம்மா

அம்மா

அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும்படி செய்ய வேண்டும். பல்வேறு திட்டங்கள் மூலமாக திமுகவினரின் வீடுகளில் கூட அம்மாவின் உருவப்படம் உள்ளது. அவர்களின் வீடுகளிலும் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பிரேமலதா

பிரேமலதா

பிரேமலதாவால் தனது கணவர் விஜயகாந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் அவர் மற்றவர்களை பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார். சால்வை போர்த்தும் கட்சி நிர்வாகிகளையே அடிக்கும் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி நம்புகிறது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுள்ள வைகோவின் நிலை இன்று மோசமாகிவிட்டது. ஒரு கவுன்சிலருக்கு இருக்கும் தகுதி கூட விஜயகாந்துக்கு இல்லை. சட்டசபையில் பேச முடியாத விஜயகாந்த், ஸ்டாலின் வெளியே வாய்ச்சவடால் விடுகிறார்கள்.

திமுக

திமுக

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியும், மக்கள் நலக் கூட்டணியும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கப் போகின்றன. அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கப் போகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+