For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தபடியாக, அம்மா கல்யாண மண்டபம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலிலதா அறிவித்துள்ளார். 11 இடங்களில் ரூ.83 கோடியில் அம்மா மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். ரூ. 1800 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 50000 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அம்மா திருமண மண்டபம் பற்றி முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு :

அம்மா திருமண மண்டபங்கள்

அம்மா திருமண மண்டபங்கள்

ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலிலதா அறிவித்துள்ளார். 11 இடங்களில் ரூ.83 கோடியில் அம்மா மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். அம்மா திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இனையதளத்தில் முன்பதி செய்ய வேண்டும். சேலம், அம்பாசமுத்திரம், மதுரை, அண்ணாநகர், உடுமலைபேட்டை, தண்டையார்பேட்டை, அயப்பாக்கம், வேளச்சேரி, கொரட்டூர், பருத்திப்பட்டு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும்.

50000 குடியிருப்புகள்

50000 குடியிருப்புகள்

குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் ரூ.1,800 கோடியில் 50,000 வீடுகள் கட்டப்படும். 45,000 வீடுகளுக்கு ரூ.945 கோடி மானியம் வழங்கப்படும்.
வீட்டுவசதி வாரியம் மூலம் சோழிங்கநல்லூரில் 2,000 வீடுகள் ரூ.600 கோடியில் கட்டப்படும். சுயநிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் 873 வீடுகள் கட்டப்படும் திருவள்ளூர், காஞ்சி, வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் கட்டப்படும் என்றும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னதாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா வாரச்சந்தை, அம்மா மருந்தகம், அம்மா தியேட்டர்கள் வரிசையில் அம்மா திருமண மண்டபமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு சங்கங்கள்

கூட்டுறவு சங்கங்கள்

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வீட்டு மனைகள் கிடைக்க, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக குளறுபடி, நிலுவை அதிகரிப்பு காரணமாக, ஏராளமான சங்கங்கள் முடங்கி விட்டன. தற்போதைய நிலவரப்படி, 650 வீட்டு வசதி சங்கங்களே செயல்பாட்டில் உள்ளன. இந்த சங்கங்களிடம் உள்ள காலி நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்தி, வருவாய் ஈட்ட, அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, எந்தெந்த சங்கங்கள் வசம் காலி நிலங்கள் உள்ளன என்பது குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, வருவாய் ஈட்டும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

English summary
Full scale preparations are going on local body elections which are due in one month. Jayalalithaa announced Amma Marraige halls ( Amma Tirumana Mandapam) in 11 places in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X