முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு: டிடிவி தினகரன்
முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்திருப்பதாக தினகரன் கூறினார்.
Recommended Video

கோவை: திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவட்டதாகவும் முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளதாகவும், விரைவில் அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:
நான் நினைத்திருந்தால் 2001-லேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல. 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன், இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன், ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்.

பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. தற்போது திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவிட்டது. முட்டை வடிவத்தில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளது. விரைவில் தமிழக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்.
நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும், அதன் பின் சட்டமன்றத்தை காலி செய்ய வேண்டியிருக்கும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திணிக்க முயன்றால், மக்களுடன் இணைந்து அமமுக போராடும். பன்னீர்செல்வம் மகன், பி.ஹெச் பாண்டியன் மகன் கட்சி பொறுப்புகளில் உள்ளனர், ஆனால் எங்களை குடும்ப ஆட்சி என்கின்றனர்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு பின், அமமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 234 தொகுதிகளும் ஆர்.கே.நகர் தொகுதி தான், மீண்டும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம்.
இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications