கடையநல்லூர் தொகுதியின் நிழல் எம்.எல்.ஏ.! அதிமுக -திமுகவை பீட் செய்யும் அமமுக நிர்வாகி!
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணமுரளி உள்ள நிலையில், அந்த தொகுதி முழுவதும் நிழல் எம்.எல்.ஏ.வாக வலம் வருகிறார் அமமுக நிர்வாகி அய்யாதுரைபாண்டியன்.
தென்காசி மாவட்ட அமமுக செயலாளராக உள்ள அய்யாதுரைபாண்டியன், திமுகவில் கடையநல்லூர் தொகுதி சீட் எதிர்பார்த்து அது கிடைக்காததால் அமமுகவில் இணைந்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் தாம் விரும்பியபடி எம்.எல்.ஏ. ஆக முடியாவிட்டாலும் கூட, அந்த தொகுதி முழுவதற்கும் தமது சொந்த நிதியில் இருந்து செலவு செய்து தன்னை ஒரு நிழல் எம்.எல்.ஏ.வாவே மக்கள் மத்தியில் பிம்பத்தை கட்டமைத்திருக்கிறார்.

திமுக வர்த்தகர் அணி
திமுக வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளராக இருந்த அய்யாதுரைபாண்டியன், சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடையநல்லூர் தொகுதியை குறிவைத்து அங்கு தனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வைத்திருந்தார். கொரோனா ஊரடங்கில் தொடங்கி இன்று வரை வாரம் ஒரு கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் தாமும் கலந்துகொண்டு வருகிறார்.

அமமுகவில் இணைந்தார்
திமுகவில் இவருக்கு கடையநல்லூர் தொகுதி ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்ட நிலையில், துரைமுருகனின் குறுக்கீடு காரணமாக அந்த தொகுதி மீண்டும் ஐ.யூ.எம்.எல்.க்கு ஒதுக்கப்பட்டது.இதையடுத்து திமுக வேட்பாளர்கள் பட்டியலை தொலைக்காட்சியில் ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, மாணிக்கராஜா மூலம் அமமுகவில் இணைந்து 3 மணி நேரத்தில் வேட்பாளராகவும் ஆகி ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களிலேயே அதிக ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கடையநல்லுர்
இந்நிலையில் இப்போது தென்காசி மாவட்ட அமமுக செயலாளராக உள்ள இவர், கடையநல்லூர் தொகுதிக்கு அடிக்கடி விசிட் அடிப்பதுடன் மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணிகளையும் மேற்கொள்கிறார். இதுமட்டுமல்லாமல் தொகுதிப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அதிமுக எம்.எல்.ஏ. செய்ய வேண்டிய அரசியலை அமமுக நிர்வாகியாக இருக்கும் இவர் முன்னெடுக்கிறார்.

தனிப்பேரவை
இதனிடையே அய்யாதுரைபாண்டியன் என்ற தனிப் பேரவையையும் இவர் நடத்தி வருவது கனிக்கத்தக்கது. மக்கள் குறைகளை கேட்பதற்காக குற்றாலத்தில் அலுவலகம் அமைத்து அதற்கென ஒரு பணியாளர்களையும் நியமித்துள்ளதால், தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், ஆகிய 3 தொகுதிகளிலும் அவருக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications