மாயமான ராணுவ விமானம்: தூத்துக்குடி வீரரின் கதி என்ன?
தூத்துக்குடி: சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானம் மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி வீரரின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி செம்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். பிளஸ் டூ முடித்து ஐடிஐ படித்துள்ள அவர் 1997ல் இந்திய கடற்படை பணிக்கு சேர்ந்தார். 19 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி வந்தார். அவரது மனைவி சுமித்ரா. அவர்களுக்கு ராகுல், அன்புசெல்வன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சென்னை கே.கே. நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். முத்து கிருஷ்ணன் குடும்பத்தின் ஆறாவது பையன் என கூறப்படுகிறது. அவரது தம்பி மாரிமுத்து கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். சென்னை தம்பாரத்திலிருந்து அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானத்தில் முத்து கிருஷ்ணனும் பயணம் செய்துள்ளார். அவரது கதி என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை. இது குறித்த தகவல் செம்பூரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அன்று மாலையே சென்னை சென்றனர். மாயமான விமானத்தில் பயணித்த 29 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரில் உள்ளனர். இதற்கிடையே மாயமான விமானம் வங்காள விரிகுடா பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி கடலோர காவல் படையினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டனர். கடலோர காவல் படை ரோந்து படகில் இரவு பகலாக தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications