வங்கி ஊழியை தவறவிட்ட லேப்டாப்பை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னையில் வங்கியில் வேலை செய்யும் பெண் அதிகாரி தவறவிட்ட லேப்டாப்பை ஆட்டோ டிரைவர் ஒருவர் நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக இருப்பவர் ஜெயகீதா(48). அவரது கணவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்கிறார். கீதா தனது கணவருடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கீதா புதன்கிழமை இரவு பணி முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது லேப்டாப்பை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகே அவருக்கு தனது லேப்டாப்பை ஆட்டோவில் விட்டது நினைவுக்கு வந்தது.
இதையடுத்து அவர் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சென்று கீதாவின் லேப்டாப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் கொடுத்துவிடுமாறு கூறினார்.
லேப்டாப் வியாழக்கிழமை கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. லேப்டாப்பை பொறுப்புடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications