கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- அமைச்சர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கலவரம் மூண்ட தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் கலவரம் ஏற்பட்டதால் அந்த பள்ளி முற்றிலும் சேதமடைந்து மாணவர்கள் படித்த இயலாத நிலை உள்ளது.

மாணவர்களின் கல்வி
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத அளவுக்கு என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அதில் வரும் புதன்கிழமை முதல் கனியாமூரில் கலவரம் நடந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர் விரும்பினால்
மேலும் பெற்றோர்கள் விரும்பினால் அருகில் உள்ள பள்ளிகளில் அந்த மாணவர்களை சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம்
கடந்த 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்த பள்ளியை கலவரக்காரர்கள் சூறையாடினர்.
Recommended Video

பேருந்துகள் எரிப்பு
அங்கிருந்த பேருந்துகளை தீவைத்து கொளுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. பள்ளி கட்டடமே ஆட்டம் காணும் அளவுக்கு அந்த பள்ளி நாசம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது. அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications