தடுமாற்றம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக அழகாக பேசும் அன்புமணி... சூப்பர்ப்!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தற்போது பிரசாரத்தில் குதித்துள்ள தலைவர்களிலையே நிறுத்தி நிதானமாக எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல், குரலை தாறுமாறாக உயர்த்தாமல், கத்திக் குவிக்காமல், கண்டபடி உளறாமல், ஒழுங்காக, அழகாக, நிதானமாக பேசும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் என்று தாராளமாக சொல்லலாம்.

தர்மபுரி தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் அவர் பேசிய பேச்சு அவ்வளவு தெளிவாக, கிளாரிட்டியுடன் கூடியதாக இருந்தது.

தன் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் முன்பு வேனில் ஏறி நின்றபடி அவர் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல அவ்வளவு தெளிவாகப் பேசினார். அவரது பேச்சுக்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.. குறிப்பாக பெண்கள் அன்புமணி பேச்சை நெகிழ்ச்சியுடன் கவனித்தனர். காரணம், அவர் குடிப்பழக்கத்தின் கேடுகளை விளக்கிப் பேசியதால்.

Anbumani attracts voters in Dharmapuri

அன்புமணியின் அந்தப் பேச்சிலிருந்து...

இங்கே நிறைய பெண்கள் கூடியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வேதனையான செய்தியை சொல்கிறேன். நம்முடைய தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் வருடத்திற்கு ரூ. 1900 கோடி வரை மது பான விற்பனை நடக்கிறதாம். எவ்வளவு கொடுமை பாருங்கள்...

இந்த 1900 கோடி ரூபாயும் நீங்கள் சமையலுக்காக, குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக, பிள்ளைகளின் திருமணச் செலவுக்காக, சிகிச்சைச் செலவுக்காக. என்று உங்களது அன்றாடத் தேவைக்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணம். கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணம். அத்தனையையும் உங்கள் வீட்டு ஆண்கள் மதுக் கடைகளுக்குக கொண்டு போய் கொடுத்து வருகின்றனர்.

எவ்வளவு வருத்தமாக இருக்கிறது. ஆனால் உங்கள் வீட்டிலிருந்து ஒரு ஆண் கூட குடிக்காமல் போனால், கடைக்குப் போகாமல் இருந்து விட்டால்.. இநத 1900 கோடியும் உங்கள் வீட்டிலேயே பத்திரமாக இருககும. பீரோவிலேயே பத்திரமாக இருக்கும்.

அதை வைத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்க முடியும், பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க முடியும். உங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ள முடியும்.. எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்.. பாருங்க, நான் பேசப் பேச உங்க முகத்தில எவ்வளவு சந்தோஷம் தெரியுது, சிரிக்கிறீங்க பாருங்க... எவ்வளவு மகிழ்ச்சி உங்களிடம் வருகிறது.

குடிப்பழக்கம் வேண்டாம். குடி குடியைக் கெடுத்து விடும். இந்தக் குடியை ஒழிக்க உங்க பாமகவால்தான் முடியும். அதுக்கு நீங்க இந்த அன்புமணியை வெற்றி பெற வையுங்க. மத்த சின்னத்தை மறந்திடுங்க. மாம்பழத்தை மட்டும் மனசுல வச்சுக்கங்க.

நான் சுகாதார அமைச்சரா இருந்தப்போ, அப்பவும் நீங்கதான் என்னை அமைச்சராக்கினீங்க. நான் விட்ட 108 ஆம்புலன்ஸ்தான இன்னிக்கு நாடு பூரா ஓடிட்டிருக்கு. எவ்வளவு தூரம் அது இன்னிக்கு மக்களுக்கு உதவுது பாருங்க. அது மட்டுமா, பாமக நிறைய செய்திருக்கு. அதையெல்லாம் நினைச்சுப் பாருங்க.

அதனால உங்களோட அன்புத் தம்பியா, அண்ணனா பிள்ளையா இருந்து கேட்கிறேன், என்னை ஜெயிக்க வையுங்க, பாமகவை ஜெயிக்க வையுங்க, தேசிய ஜனநாயக கூட்டணியை ஜெயிக்க வையுங்க.. நீங்க நினைப்பதெல்லாம் நடக்கும்.

நான் ஜெயிச்சதும் செய்யும் முதல்வேலையா இந்த சாராயக் கடையையெல்லாம் இழுத்து மூடுவதுதான. அதுக்காகவாவது ஜெயிக்க வையுங்க என்றார் அன்புமணி.

பரவாயில்லை... அதைச் செய்வேன் இதைச் செய்வேன்.. இதைக் கட்டி அதை இழுப்பேன்.. அதைக் கட்டி இதை இழுப்பேன் என்று டான்ஸ் ஆடாமல் உடான்ஸ் விடாமல்.. மக்களின் உண்மையான பிரச்சினைகளைச் சொல்லி, நிவாரணத்திற்கு வழியையும் காட்டி இயல்பாகப் பேசும் இவர்.. பாராட்டுக்குரியவர்தான்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+