விவாத சவாலை ஏற்று முத்தமிழ் பேரவைில் காத்திருந்த அன்புமணி.. புறக்கணித்த அமைச்சர் செங்கோட்டையன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவைக்கு அன்புமணி வருகை தந்தார்.

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது குறித்தும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

Anbumani is waiting in Muthamil Peravai to debate with Sengottaiyan

இதற்கு பதிலளிக்கும் விதமாக கல்வித் துறையில் முறைகேடா. அதை நேருக்கு நேர் விவாதிக்க அன்புமணி தயாரா என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார். அதையேற்ற அன்புமணி சவாலுக்கு தாம் தயாராக உள்ளதாகவும், அதற்கான இடத்தை கூறுமாறும் பதில் அளித்திருந்தார்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன், அதையும் அன்புமணியே தேர்வு செய்யட்டும் என்றார். இதனையேற்ற அன்புமணி 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதன்படி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும் என்று கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இதையேற்று இன்று மாலை 4 மணிக்கு முத்தமிழ் பேரவைக்கு வந்தார் அன்புமணி. மேடையில் செங்கோட்டையனின் வருகைக்காக தொடர்ந்து காத்திருந்தார். செங்கோட்டையன் கடைசி வரை வரவில்லை.

இதனிடையே, அன்புமணி பேசுகையில், எனக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே எந்தவித தனிபட்ட பிரச்சினையும் இல்லை. விவாதிக்க தயாரா? என்று அவர்தான் முதலில் கேட்டார். இதேபோல் ஸ்டாலினையும் பல்வேறு விவகாரங்களில் நான் விவாதிக்க அழைத்தபோது அவரும் மௌனம்தான் சாதித்தார் என்று அன்புமணி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anbumani Ramadoss is waiting in Muthtamil Peravai for open discussion with Minister Sengottaiyan .
Please Wait while comments are loading...