தர்மபுரியில் உள்ள மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்த அன்புமணி ராமதாஸ்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமத்தை அத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமத்தை அத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்துள்ளார்.

அதன்படி இந்த கிராமத்தில் ஸ்மார்ட் பள்ளிகள், அதி நவீன மருத்துவ வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். வீடு இல்லாத கிராம மக்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித்தரப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, நூலகம், அகண்ட அலைவரிசை சேவை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின்படி செய்து தரப்படும்.
2016-ம் ஆண்டிற்குள் இந்த கிராமம் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கொண்ட முன்மாதிரி கிராமமாக மாற்றப்படும். நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க வகை செய்வதுடன், முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு பயன்களையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications