பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்! செயல் தலைவராக நியமனம்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாமகவின் தலைவராக இனி தாமே செயல்படுவதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளது பரபபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி கட்சியின் நிறுனத் தலைவராக டாக்டர் ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். டாக்டர் ராமதாஸின் மகன், அன்புமணி ராமதாஸ், பாமகவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தன், பாமகவின் இளைஞரணித் தலைவராக உள்ளார்.

பாமகவின் இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை டாக்டர் ராமதஸ் நியமித்ததை, அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவிலேயே கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸ் மிக கடுமையாக எதிர்த்தார். அத்துடன், பாமகவினர் தம்மை சந்தித்து ஆலோசனை நடத்த பனையூரில் தனி அலுவலகமும் திறந்தார் அன்புமணி ராமதாஸ்.

இதனைத் தொடர்ந்து தந்தை டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனால் அப்பாவும் மகனும் சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று திடீரென டாக்டர் ராமதாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான தாமே இனி கட்சியின் தலைவராக செயல்படப் போவதாகவும், தற்போதைய தலைவரான அன்புமணி ராமதாஸ் இனி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்வைத்து தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,2026-ம் ஆண்டு எதிர்வரும் சட்டசபை தேர்தலிலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதனை செயல்படுத்த வேண்டி, கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதி என் முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

இதனடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சி எனும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய நிறுவனராகிய ச. ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன்.

தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸை, பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றார்.

இதனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+