தருமபுரியில் இப்போதே அஸ்திவாரம் தோண்டும் பாமக .. 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அன்புமணி வியூகம்
தருமபுரி: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி சட்டசபை தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அவர் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக உள்ளோம்.
இந்தத் தேர்தலுக்கான களப்பணியில் தொண்டர்கள் தீவரமாக ஈடுபட வேண்டும். அவர்களை நாம் அடிக்கடி சந்திப்பதன் மூலம்தான் ஆதரவ பெற முடியும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம. எதற்காக நாம் இழந்தோம் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இந்த முறை செயல்பட வேண்டும்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாமக தருமபுரி தொகுதியில் போட்டியிடும். இதில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் பாமக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் இங்கு மதுபானம் ஆறாக ஓடியிருக்கும். தெரு தெருவாக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் மதுவை கொடுத்திருப்பார்கள்.
நாம் தொடர்ந்து போராடினால்தான் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியும். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அப்போது பொதுமக்களை சந்திக்கும் போது அவர்கள் மனம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பது நன்றாக தெரிகிறது.
இதனால் வரும் 2026 ஆம் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். இதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என தெரியவில்லை. அது போல் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் அல்லது யாருடனும் கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்றே தெரிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச தரமான மருத்துவமனை, இலவச கல்வி, வேலைவாய்ப்பு, மதுவிலக்கு உள்ளிட்டவைகளை அமல்படுத்தும் என அன்புமணி மிகப்பெரிய பட்டியலை போட்டு வைத்துள்ளார். அது போல் ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நிழல் நிதிநிலை அறிக்கை என்ற ஒன்றை பாமக ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications