பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வேறு வழியில்லாமல்தான் உயர்த்தியிருக்கீங்க! வலிக்காமல் அடித்த அன்புமணி
சென்னை: பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அமெரிக்க - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை 50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன.
கச்சா எண்ணெய்
இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது.
விலைவாசி உயர்வு
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்." என கூறியுள்ளார்.
விலை உயர்வு
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நேரடியாக எதிரொலித்து வந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. மே 15ஆம் தேதி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்வு செய்யப்பட்டிருந்தது.
பெட்ரோல் விலை
பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கு போர் தொடங்கிய பிறகு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் எரிபொருள் விலை உயர்வு இது. இந்த உயர்வுக்குப் பிறகு டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.97.77 ஆகவும், டீசல் விலை ரூ.90.67 ஆகவும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை 2.83 ரூபாய் உயர்ந்து 103.67 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 2.86 ரூபாய் உயர்ந்து 95.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications