மரபணு மாற்ற கடுகு வகையை தடை செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: மரபணு மாற்றப்பட்ட கடுகு வகைக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என, பா.ம.க., எம்.பி.,யும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
டெல்லி பல்கலை கழகத்தின் மரபணு பொறியியல் துறை விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையை கண்டுபிடித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டுக்கு, மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையை கொண்டு வர, மத்திய அரசிடம் அனுமதியும் கேட்டுள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், தானியங்களால் மனிதனுக்கும், மண்ணுக்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகு வகைக்கும் தடைவிதிக்க வேண்டும். அன்றாட உணவில், கடுகு, குறிப்பிட்ட அளவு சேர்க்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில், கடுகில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகு, மனித உடலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும். அதை உற்பத்தி செய்யும் மண்ணும் பாழ்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications