புராதன சின்னங்கள், கோவில்கள் பராமரிப்பு... நிபுணர்களின் கருத்துகளை கேட்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தின் புராதன சின்னங்கள் மற்றும் கோவில்களை பராமரிப்பது குறித்து பொதுமக்கள், நிபுணர்களின் கருத்துகளை கேட்டு புதிய விதிமுறைகளை உருவாக்க கூட்டம் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புராதன சின்னங்களை முறையாக பராமரிக்க நிபுணர் குழுக்களை அமைக்கவில்லை என்று பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
பின்னர் தமிழகத்தில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் ஒரு குழுவை ஹைகோர்ட் நியமித்தது. இந்த குழுவும் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது.

பொதுநல வழக்கு:
அதேபோல நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 400 ஆண்டு பழமையான கோவில்களை, அபசகுனம் என்று கூறி இடிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த 2 வழக்குகளையும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து கடந்த டிசம்பர் மாதம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அழியும் புராதன சின்னங்கள்:
அதில், "மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, புனரமைப்பு என்ற பெயரில் கோவில்களில் கட்டிட பணிகளை மேற்கொள்ள அனுமதித்தால், புராதன சின்னங்கள் பல அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

தொன்மையை பாதுகாப்போம்:
எனவே, புராதன சின்னங்கள், தொன்மையான கோவில்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றை உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்க வழிமுறைகளை நிபுணர்களை கொண்டு உருவாக்க வேண்டும். அதுவரை புனரமைப்பு பணிகளில் அவசரமான பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. அரியவகை புராதன சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டிருந்தனர்.

நிபுணர்களுக்கு அவமானம்:
இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள், "புராதன சின்னங்களை பராமரிப்பது குறித்து வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அவர் கூட்டத்தை கூட்டுவதற்கு முதல் நாள், அது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவ்வாறு செயல்படுவதால், கூட்டத்தை நடத்துவதற்கான நோக்கம் நிறைவேறாது. மேலும், கடைசி நேரத்தில் கூட்டம் குறித்து தகவல் தெரிவிப்பது, நிபுணர்களை அவமானப்படுத்துவதுபோல உள்ளது.

தகவல் தெரிவிக்க உத்தரவு:
மேலும், புராதன சின்னங்கள் பராமரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை தனித்தனியாக தெரிவிக்க விரும்பினால், ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துகளை கொண்டு, புராதன சின்னங்களை பராமரிக்கும் விதிமுறைகளை உருவாக்கும் கூட்டத்தை கூட்டவேண்டும். இந்த சின்னங்கள் பராமரிப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அனைத்து நிபுணர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தகவல் தெரிவிக்கவேண்டும்.

பாதுகாக்க அரசு உதவிகள்:
இந்த கூட்டத்தில் புராதன சின்னங்களை எப்படி திறமையான நிபுணர்களை கொண்டு புனரமைக்கலாம்? என்பது குறித்தும் ஆலோசனை செய்யவேண்டும். இந்த கூட்டத்துக்கு மத்திய அரசும், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும் தேவையான உதவிகளை செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications