ஆந்திர என்கவுண்டர்: பலியான 20 பேரில் 9 உடல்கள் தகனம்
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 9 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 6ம் தேதி செம்மரங்கட்டைகளைக் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட்டது. அதில். 15 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரசநத்தம், அத்திமரத்துவழவு, கருத்தம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 7 பேரின் உடல்களை உறவினர்கள் தகனம் செய்தனர். உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் வேறு வழியின்றி தகனம் செய்ய நேரிட்டதாக அவர்கள் கூறினர்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, உடனடியாக தகனம் செய்யப்பட்டது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் பாலசமூத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரது உடலும் தகனம் செய்யப்பட்டது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications