சித்தூரில் நடந்தது மிகப் பெரிய மனித உரிமை மீறல், நடந்திராத ஒன்று - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர காவல்துறையினரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: ஆந்திரக் காவல் துறையினரால், தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென்று அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை வெளியிட்டிருக்கிறார்களே?

Andhra encounter: Karunanidhi wants Judicial inquiry

பதில் :- ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கோரிக்கைதான். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி, 20 தமிழகத் தொழி லாளர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். அந்தச் செய்தி வந்தவுடன் நான் அதிர்ச்சியுற்றுக் கண்டனம் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி தரத்தக்கவையாக உள்ளன.

இதைப்போன்று ஒரே நாளில் 20 பேர் காவல் துறையினரின் என்கவுண்டர் காரணமாக கொல்லப்பட்ட நிகழ்ச்சி இதற்கு முன்பு நடை பெற்றதே இல்லை. இந்த அப்பாவித் தொழிலாளர் களை முதலிலேயே கைது செய்து, இரவு நேரத்தில் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் கைகளைக் கட்டி அவர்களின் மார்பிலே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் இங்கே கொண்டு வரப்பட்டு, அதைப் பார்த்து குடும்பத்தினரும், ஊர் மக்களும் மறியல் போராட்டம் நடத்தியிருக் கிறார்கள். அவர்களுக்கு அரசின் சார்பில் ஆறுதல் சொல்லக் கூட அமைச்சர்களோ, அதிகாரிகளோ வரவில்லையாம். ஆந்திரப் போலீசாரின் அராஜகச் செயல் காரணமாக தமிழகத்திலே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

சுட்டுக் கொன்று விட்டு, பிறகு அவர்களின் உடல் அருகில் பழைய செம்மரக் கட்டைகளைக் கொண்டு வந்து போடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. எனவே உண்மை விவரங்கள் உலகத்திற்குத் தெரிய இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கான தீவிர முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+