சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது... ஆந்திர அரசு கைவிரிப்பு
சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர மாநில தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர மாநில தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால் சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , 2 புள்ளி 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டார்.

இந்நிலையில் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பராமரிப்பு செலவுகளுக்கு ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய சுமார் 600 கோடி ரூபாயில், 575 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கண்டலேறு அணையின் மொத்த கொள் அளவான 8 டி.எம்.சி.யில் தற்போது, 4 புள்ளி ஆறு ஐந்து டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தற்போதைக்கு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ள சூழலில் ஆந்திர கண்டலேறு நீரும் வருவதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications