குடும்பம் நடத்த மறுத்த கணவர் உட்பட 7 பேரை எரித்துக் கொன்ற மனைவி - 3 பேர் கைது!
மதுரை : மதுரை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவரை, அவரது குடும்பத்தாருடன் எரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.
மதுரை, சேடபட்டி அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு பணி நிமித்தம் சென்னைக்கு சென்று விட்டார் கண்ணன்.
எனவே, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கண்ணனை அழைத்து வந்தார் முருகேஸ்வரி. ஆனால், அதற்கு கண்ணன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோருடன் கண்ணன் உறங்கி கொண்டிருந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த முருகேஸ்வரி வீட்டின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டினார். பின்னர் உள்ளே படுத்திருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தார்.
இதில், வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி மகள் சுகந்தி(35), சங்கீதா (17), வினித்(13), சங்கீத்(12), ஆகியோர் தீ விபத்தில் சிக்கினர். வினித் தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயமடைந்த வினித் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மனைவி பாண்டீஸ்வரி, அவரது தாயார் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ததுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
போலீசாரிடம் பாண்டீஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ‘தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதிக்காததால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை எரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் பேரையூர் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எரித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications