நேற்று விவசாயி, இன்று அனிதா, நாளை நாம்... ஒன்இந்தியா வாசகரின் சாட்டையடி கவிதை!
அனிதாவின் தற்கொலை பலரின் ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.
சென்னை : அனிதாவின் தற்கொலையால் தமிழகமே வெகுண்டெழுந்துள்ளது, தங்கள் வீட்டு மகளான அனிதா இறந்த சோகம் பெற்றோரையும், சகோதரியை இழந்த சோகம் தோழர்களை ஆட்டிப் படைக்கிறது. அனிதாவின் மரணத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதை ஒன் இந்தியா வாசகர் காந்தி காந்தி தனது சாட்டையடி கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் வலி நிறைந்த வரிகள் இதோ உங்களுக்காக...

இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
அன்று அவள் போராடிய போது
வேடிக்கை பார்த்த நாம்
இன்றோ ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
முகம் தெரியாதவர்கள் எல்லாம்
இன்று அவள் வீடு முன்னே
ஆறுதல் சொல்லவா..?
இல்லை நானும் துக்கத்தில் பங்கேற்று கொண்டுவிட்டேன்
என்பதை மீடியாக்களில் தெரிய படுத்தவா..?
யாருக்கு வேணும் உங்கள் துக்க விசாரணை
அவள் கண்ணீர் சிந்திய போது
துடைக்க யாரும் மில்லை அன்று
இன்றோ கண்ணீர் அஞ்சலி போஸ்ட்
ஒட்ட ஆயிரம் பேர்
எந்த மீடியாவும் இவளுக்காக
முன்வரவும் மில்லை
எந்த அரசியல் வாதியும்
வாதாடவும் மில்லை
இந்த சினிமா நடிகரும் இவளுக்கு
குரல் கொடுக்கவும் இல்லை
ஆனால் இன்றோ இவள் இல்லை
அப்ப எதற்கு உங்கள் ஆறுதல் ..,
உங்கள் துக்க விசாரணை ..,
யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணீர் அஞ்சலி ..?
தினம் தினம் அவர்களின் trp ன் பசிக்கு
மீடியாக்கள் ,
அவர் அவர் பதவிகளை காப்பாற்றி கொள்ள
அரசியல் வாதிகள்,
அடுத்த அடுத்த படங்கள் ஹிட் ஆக்கி கொள்ள
சினிமா காரர்கள் ,
இதை மூன்றுமே யார் உங்களுக்கு கொடுத்தது ..?
யாரால் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ..?
உங்களால் முடியுமா .?
யாரும் மில்லா வேற்று கிரகத்தில்
உங்களால் இவ்வாறு வாழ முடியுமா ..?
நீங்கள் சொல்வீர்கள் இந்த இடத்துக்கு
வர எவ்வளவு கஷ்ட்ட பட்டு இருப்பேன் என்று ..!
கஷ்ட்ட படுங்களேன் பார்ப்போம்
மனிதர்களே இல்ல ஊரில் ..?
இந்த இடம் ஒன்றும் சும்மா வரவில்லை
ஒவ்வொன்றும் நம் முன்னோர்கள்
வேர்வை சிந்தியதாலும் ,
இரத்தம் கொட்டியதாலும் தான்
நாம் இன்று சுகமாக இருக்கிறோம் ..,
ஆடம்பர பங்களாவும்,
ஆடம்பர ஓட்டலில் விருந்தும் ஆட்டமும் ,
அங்கு நீங்கள் எடுக்கப்படும் செல்பியும் ,
facebook யிலும் whatsapp யிலும் போட முடிகிறது..
இருபத்தி ஏழு மாளிகை ஒரு குடும்பம் வாழ,
எப்படி நீயே ஒவ்வொரும் செங்கல்லும் நீ கட்டியதா ..?
ஒவ்வொரு மனிதனின் உழைப்பில் தான் உன் வாழ்க்கை..,
அவன் மட்டும் இல்லை என்றால் உன் ஆடம்பரம் இல்லை ..
இவர்களை மட்டும் நான் சொல்லவில்லை,
தன் குடும்பம்,
தன் பிள்ளை மட்டும் ,
நன்றாக இருந்தால் போதும் ..,
நாடு எவ்வாறு போனால் எனக்கென்ன ..?
என்று நீங்கள் போய்க்கொண்டு இருப்பீர்கள் எனில்,
நாளையும் வேடிக்கைதான் பார்ப்பார்கள்
இது உங்களுக்கு நேரும் போதும் ..,
technology technology நாம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறோம்
bluewhale game மில் சேர்ந்து self suicide நோக்கித்தான்..,
oviya kaviya பற்றி பேச நேரம் இருக்கும் போது
நமக்காக போராடுபவர்கள் பற்றி பேச கூட வேண்டாம்
அவர்களை பைத்திய காரர்கள்,
பொழைக்க தெரியாதவர்கள் என்று சொல்லும் போது
சாகாமலே செத்து போய்விடுகிறார்கள்
இப்படியே நாம் வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தோம் என்றால்,
நேற்று விவசாயி,
இன்று அனிதா,
நாளை நாம்தான் மிச்சம் இருப்போம்
ஏன் ஒரு தலைவன் கேட்டால்தான் கேக்குமா ..?
நாமமெல்லாம் கேட்டால் கேக்காத..?
கேப்போம் தமிழா வா..,
ஒன்று சேர்வோம் தமிழா மீண்டும்..,
நாளைய தமிழகத்தை மீப்போம்
தமிழா
நீ வா..,
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications