அனிதா, சுனீதா, ப்ரீதா, சங்கீதா... 'தா தா'ன்னு பெயர் முடியுதே.. இவங்கெல்லாம் யாரு தெரியுமா?
காஞ்சிபுரம்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அகான்க் ஷா என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த நான்கு பெண் புலி குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டியுள்ளார். அனிதா, சுனீதா ப்ரீதா மற்றும் சங்கீதா என்று அந்த புலிக்குட்டிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 15.3.2013 அன்று நேரில் சென்ற முதல்வர் ஜெயலலிதா, ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார். மேலும், பூங்காவில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தாரா, மீரா, பீமா
9.5.2014 அன்று அனு என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் புலி குட்டிக்கு பீமா என்றும் பெயர் சூட்டினார் ஜெயலலிதா.

ஆண் புலிக்குட்டிகள்
நம்ருதா என்ற புலி ஈன்றெடுத்த இரண்டு ஆண் புலி குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் பெயர் சூட்டினார்.

20 லட்சம் பார்வையாளர்கள்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வன உயிரினங்களை ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர்.

4 பெண் புலிக்குட்டிகள்
உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அகான்க் ஷா என்ற வெள்ளை பெண் புலி 12.9.2014 அன்று நான்கு பெண் புலி குட்டிகளை ஈன்றது.

பெயர் சூட்டிய ஜெ
முதல்வர் ஜெயலலிதா, அகான்க் ஷா என்ற வெள்ளை பெண் புலி ஈன்றெடுத்த நான்கு பெண் புலி குட்டிகளுக்கு அனிதா, சுனீதா, ப்ரீதா, மற்றும் சங்கீதா என்று பெயர் சூட்டியுள்ளார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தா.. தா.. தா
இதில் ஒரு சுவாரஸ்யம் பாருங்கள்.. ஜெயலலிதா வைத்த இந்தப் பெயர்கள் எல்லாம் தா என்ற எழுத்தில் முடிகிறது.. அட ஜெயலலிதா என்ற பெயரும் கூட "தா"வில்தான் முடிகிறது பாருங்க!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications