அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்- உண்மையை மறைக்கும் திமுக- மதுரை டூ சென்னை பாஜக மகளிரணி நீதிப் பேரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க முயலும் ஆளும் திமுகவைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பாஜகவின் மகளிரணியினர் மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னையில் பேரணி நிறைவடையும் போது ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக மகளிரணியினர் மனு வழங்குவர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநரைச் சந்தித்து பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

அண்ணா பல்கலை. மாணவி- அதிமுக, தவெக, நாம் தமிழர் போராட்டங்கள்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மையை மறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அண்ணா திமுகவினர் நேற்றும் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேற்று கைப்பட எழுதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்திருந்தார். நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரங்களாக விநியோகித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதேபோல சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பாஜகவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக நீதிப் பேரணியை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+