அசராதீங்க..அண்ணாமலைக்கு 'அப்படி' ஒரு அகில இந்திய பதவி கிடைக்குமாம்- ஆடிட்டர் குருமூர்த்தி நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சராக்கப்படுவதைவிட, பாஜக கட்சியின் அகில இந்திய பதவிகள் ஒன்றில் நியமிக்கப்படுவார் என துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவிலும் பாப்புலாரிட்டி இருக்கிறது என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
தந்தி டிவி சேனலுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜகவைப் பொறுத்தவரை எந்த ஒரு மாநிலத் தலைவரையும் 2-வது முறையாக மாநிலத் தலைவராக நியமிக்கவில்லை தமிழ்நாட்டுக்கு விதிவிலக்காக செய்ய வேண்டும்.

அண்ணாமலையை மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தால் சுமூகமான கூட்டணி உருவாகுமா? என்ற கேள்விக்குறி இருந்தது. அண்ணாமலை, தமிழ்நாட்டில் மட்டும் அவருக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது என நினைக்காதீர்கள்.
எந்த பதவியிலும் இல்லாத ஒரு மாநிலத் தலைவருக்கு அகில இந்திய அளவில் பெரிய அளவில் மகத்துவம் இருக்கிறது. அண்மை காலத்தில் அண்ணாமலையைத் தவிர வேறு எந்த ஒரு பாஜக மாநிலத் தலைவரிடம் இந்த மகத்துவத்தை நான் பார்க்கவில்லை.
உதாரணமாக, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என்றால் அவர் அந்த மாநிலத்தின் முதல்வர். அப்படி இல்லாமல், கீழே இருந்து வேலை செய்து வந்து, ஒரு கட்சிக்கு ஸ்தானத்தைக் கொடுத்து அதன் மூலமாக, நாடு முழுவதும் அவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது என்பது உண்மை.
அதனால் பாஜக, அண்ணாமலையை கீழே இறக்குவாங்க.. அவருடைய ரோலை குறைப்பாங்க என்று மட்டும் நினைக்காதீங்க.. அண்ணாமலைக்கு மிகப் பெரிய அளவில் பதவி கொடுப்பாங்க என்பதில் சந்தேகமே இல்லை.
தேசிய அளவில் அண்ணாமலைக்கு மிகப் பெரிய பதவி கொடுப்பாங்க.. அரசில் இடம் கொடுக்கலாம் என கேட்டால் வேண்டாம் என்பார்கள். அரசு நிர்வாகத்தை விட கட்சி நிர்வாகம்தான் நன்றாக பணி செய்யக் கூடியவர் அண்ணாமலை. தேசிய அளவில் அண்ணாமலைக்கு ஒரு அணித் தலைவர், பொதுச்செயலாளர் போன்ற ஒரு பதவி கிடைக்கும். பாஜகவின் பிரதான கட்சி நிர்வாகத்தில் அண்ணாமலை இருப்பார் என நினைக்கிறேன்.
அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. அதனால் புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அண்ணாமலையை நீக்கிவிட்டுதான் பாஜக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது என கூற முடியாது. இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications