ப்ரீகேஜி பள்ளிகளுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும்?, தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: ப்ரீகேஜி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜூலை 22ம் தேதிக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று மெட்ராஸ் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973ன்கீழ், மாநிலத்தில், 760 பிளே ஸ்கூல்கள் மூடப்பட்டதை எதிர்த்து, வில்லிவாக்கத்தை சேர்ந்த கே.பாலசுப்பிரமணியம் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப்ரீகேஜி பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் என்ன என்பதை வரைவாக (டிராப்ட்) தயாரித்து அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், வரைவை தாக்கல் செய்தார்.
அந்த வரைவில், பிளே ஸ்கூல்கள் நடத்த வேண்டுமானால், அங்கு விளையாட்டு மைதானம் அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து வியந்த, நீதிபதிகள், 3 வயதுள்ள குழந்தைகள் பயிலும் பிளே ஸ்கூலுக்கு எதற்கு மைதானம் என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளிலேயே மைதானங்கள் இல்லையே, அப்படியிருக்கும்போது பிளேஸ்கூலுக்கு மைதானம் அவசியம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.
பிளே ஸ்கூல்கள் மற்றும் ப்ரீகேஜி பள்ளிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பதை ஜூலை 22ம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications