டிடிவி தினகரனுடன் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு!
சென்னை அடையாறில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவசுப்ரமணியம் சந்தித்து சென்றுள்ளார்.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்ரமணியம் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் டெல்லி திஹார் சிறையில் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தார். சிறையில் இருந்து வெளி வந்தவரை அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்த தினகரன் அதிமுக அணிகள் இணைகிறதா என்பதை 60 நாட்கள் பொருத்திருந்து பார்க்கப்போவதாகக் கூறினார். மேலும் ஆகஸ்ட்டு மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய தீவிர அரசியல் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மொடக்குறிச்சி எம்எல்ஏவும் இன்று தினகரனை சந்தித்துள்ளார். அடையாறில் உள்ள வீட்டில் தினகரனை சந்தித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்ரமணியம் ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications