அப்ப சாரணர் இயக்கம்.. இப்ப ஆர்.கே நகர்.. ஆனாலும் பாவம் பாஸ் பாஜக!
சாரணர் இயக்க தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்ததை போலவே தற்போது ஆர்.கே நகர் தேர்தலிலும் பாஜக கட்சி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: தற்போது ஆர்.கே நகரில் தீவிரமாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கட்சி நோட்டாவை விட மிகவும் குறைவான வாக்குகள் பெற்று மிகவும் மோசமாக தோற்கும் நிலைமைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு நடந்த சாரணர் இயக்க தேர்தலிலும் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் மோசமாக தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தோல்விகள் குறித்தும் மக்கள் தற்போது பேசி வருகின்றனர்.
இதை இரண்டையும் வைத்து சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலாக போஸ்ட் செய்து வருகின்றனர். இந்த விஷயம் தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

சாரணர்
சில மாதங்களுக்கு முன்பு சாரணர் இயக்க தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட பாஜக கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா வெறும் 52 வாக்குகள் மட்டுமே எடுத்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக் கல்வியின் முன்னாள் இயக்குநர் பி.மணி 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நோட்டாவை விட குறைவு
தற்போது நடக்கும் ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையிலும் இதேபோன்ற தோல்வி பாஜக கட்சிக்கு ஏற்பட இருக்கிறது. பாஜக கட்சி 7 சுற்றுகள் முடிவில் 485 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது. ஆனால் நோட்டாவிற்கு 798 வாக்குகள் விழுந்து இருக்கிறது.

வைரல்
இந்த மோசமான வாக்கு காரணமாக பாஜக கட்சியை பலரும் கலாய்த்து வருகின்றனர். பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தொடங்கி அனைவரும் இதை வைத்து கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றார். ஆளும் தேசிய கட்சி குறைந்த பட்சம் நோட்டாவை விட அதிக வாக்காவது வாங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
ஹப்பா நிம்மதி
தற்போது இந்த தேர்தலில் பாஜக 485 வாக்குகள் வாங்கிவிட்டது. சாரணர் தேர்தலில் வாங்கிய 52 ஓட்டுக்களை விட இது அதிகம் தான் என பாஜக நிம்மதி அடைவது போல இவர் கலாய்த்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications