சூளைமேட்டில் மதுக்கடை முற்றுகை: மதிமுக, விசிக, மமக தொண்டர்கள் கைது
சென்னை: சென்னை சூளைமேட்டில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று ஒருநாள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

டாஸ்மாக் கடை முற்றுகை
மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை சூளைமேட்டில் இன்று டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேயமக்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றதால் சூளைமேடு பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மல்லை சத்யா உள்ளிட்ட தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தள்ளுமுள்ளு பதற்றம்
சூளைமேடு சாலையில் கூட்டம் அதிகரிக்கவே, பதற்றமும் அதிகரித்தது. அங்கு வந்த போலீசார் மல்லை சத்யா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சாத்தான் வேதம் ஓதுகிறது
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்று கூறிய அவர், மதுவுக்கு எதிரான போராட்டத்தை சிலர் அரசியலாக்க முயலுகின்றனர். அது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது என்றார். மதுவிற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தினைப் பற்றி தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மதுவுக்கு எதிரான முழக்கம்
கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது மதுவுக்கு எதிராக முழக்கமிட்ட தொண்டர்கள். மதுக்கடைகளை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications