சசிகலாவுக்கு சிறை... அன்றே எச்சரித்த சிவன்மலை ஆண்டவர்
திருப்பூர் சிவன்மலை கோவிலில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்படுவதால் பிரபலமான ஒருவர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கடந்த மாதமே கூறப்பட்டது. சசிகலா கைது மூலம் இது உண்மையாகியுள்ளது.
திருப்பூர்: சசிகலா கைது செய்யப்படுவார் என்பதை சூசகமாக கடந்த மாதமே சூசகமாக உணர்த்தியுள்ளார் சிவன்மலை ஆண்டவர். இந்த கோவிலில் உள்ள பூஜை பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்ட போதே முக்கிய பிரமுகர் கைதாவார் என்று பேசப்பட்டது. அது உண்மையாகிவிட்டதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.
காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை. இந்த மலை மீது சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இறைவன் பக்தரின் கனவில் வந்து உத்தரவிடும் பொருளை வைத்து பூஜை செய்வது ஐதீகம்.
பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள். இதனையடுத்து அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும்.

உத்தரவு பெட்டி
கடந்த சில ஆண்டுகளாகவே சிவன் மலை கோவிலில் உத்தரவு பெட்டியில் வைத்து சர்க்கரை, அரிசி, தண்ணீர், பென்சில், கோனார் தமிழ் உரை நோட்ஸ், வேட்டி, துண்டு, பால், மோர், உப்பு, அச்சுவெல்லம், துளசி இலைகளும் கூட வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் பூஜை
தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும். 2004ஆம் ஆண்டு தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள்
மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அதன்படி இப்போது இரும்புச் சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

இரும்பு சங்கிலி
இதையடுத்து சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. அந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று எழுதப்பட்ட ஒரு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் இரும்பு சங்கிலியை வைத்து எந்த பக்தரின் கனவில் வந்து கடவுள் உத்தரவிட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது

சசிகலாவிற்கு சிறை
இரும்புச் சங்கிலி வந்திருப்பதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்படுவார்கள் என்று கூறி வந்தனர். அது போலவே சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு காத்திருந்த சசிகலா, இப்போது தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார். இது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று சிலர் கூறலாம். ஆனால் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதமே விசாரித்து முடிக்கப்பட்ட வழக்கில் சசிகலா முதல்வராக ஆசைப்பட்ட போது வந்ததுதான் சிவன் மலை ஆண்டவரின் உத்தரவு பெட்டி மீது பக்தர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications