ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்
ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவேயில்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி வாக்குமூலம் வெளியிட்டனர்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அறிக்கையை சமர்ப்பிக்க 2ஆவது முறையாக கால அவகாசம் கோரினார்.

அப்பல்லோ இணைந்தார்
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ஆஜரானார். நளினி கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அப்பல்லோவில் பணியில் சேர்ந்துள்ளார்.

சிறப்பு வார்டில்
அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு நளினி பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பணியில் இருந்தார்.

ஜெ. லேசாக புன்னகை
ஆறுமுகசாமி ஆணையத்தில் நளினி கூறுகையில் நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை. ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை. நான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் என்னை பார்த்து ஜெயலலிதா லேசாக புன்னகை உதிர்த்துள்ளார்.

மூளை செயலிழந்தது
ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ஆம் தேதியும் நான்தான் பணியில் இருந்தேன். அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது என்று தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications